Oct 20, 2025
Thisaigal NewsYouTube
சினிமா

சர்தார் 2 திரைப்படத்தில் விஜய் பட இயக்குநர்…

Share:

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார். கார்த்தி இப்படத்தில் அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார். குறிப்பாக அப்பா சர்தார் கதாபாத்திரத்தில் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருந்தார். மேலும் இப்படத்தில் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன், லைலா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் வில்லாதி வில்லன் நடிகர் எஸ். ஜே. சூர்யா இப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில், இப்படம் குறித்து மற்றொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திலி இயக்குநர் தரணியும் இணைந்துள்ளாராம். கில்லி, தூள், குருவி என பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் தரணியை பக்கத்தில் வைத்து கொண்டுதான் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். அவர் தன்னால் முடிந்த ஆலோசனைகளை இப்படத்திற்கு கொடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

Related News