தமிழ் சினிமாவில் சில நட்சத்திரங்களுக்கு எப்போதுமே அறிமுகம் தேவையில்லை. அப்படி மக்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ள நட்சத்திரம்தான் நடிகர் கமல்ஹாசன்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இதை தொடர்ந்து இந்தியன் 3 படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதே போல் கமல்ஹாசன் 234 திரைப்படமும் அவர் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலக பிரபலங்களின் அன்ஸீன் வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் புரட்சி தலைவர் நடிகர் எம்.ஜி. ராமசந்திரன் அவர்களுடன் கமல்ஹாசன் நடித்த காட்சிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.








