Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தளபதி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அரவிந்த் சாமி இல்லையாம்
சினிமா

தளபதி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அரவிந்த் சாமி இல்லையாம்

Share:

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் - மம்மூட்டி இணைந்து நடித்து 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தளபதி. இப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரீவித்யா, ஷோபனா, பானுப்ரியா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இன்று வரை தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக தளபதி பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ரஜினியின் சகோதரராக கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அரவிந்த் சாமி. இது இவருடைய அறிமுகத் திரைப்படமாகும்.

ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது அரவிந்த் சாமி கிடையாது, வேறு யார் தெரியுமா? நடிகர் கார்த்திக் தான்.

அக்னி நட்சத்திரம், மௌனராகம், அமரன் போன்ற படங்களில் நடித்து நம் மனதில் இடம் பிடித்த நடிகர் கார்த்திக் தான் தளபதி படத்தில் அரவிந்த் சாமி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்காமல் போக, அவருக்கு பதிலாக அரவிந்த் சாமியை இந்த ரோலில் நடிக்க வைத்துள்ளனர்.

Related News