Oct 19, 2025
Thisaigal NewsYouTube
அதுதான் என் கடைசிப் படம்…. அமீர் கான்
சினிமா

அதுதான் என் கடைசிப் படம்…. அமீர் கான்

Share:

நடிகர் அமீர் கான் ஹிந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். எனினும் கடந்த சில காலமாக அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூலை ஈட்டவில்லை. அடுத்து அவர் நடித்து இருக்கும் சித்தாரே ஸாமீன் பார் படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகிறது. அது நல்ல வசூலை ஈட்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில் அமீர் கான் அண்மையில் அளித்த பேட்டியில் தான் எடுக்கப் போகும் மகாபாரதம் படம் தான் தனது கடைசிப் படமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். அது என் கனவுப் படம், அந்த படத்தை மட்டும் எடுத்துவிட்டால் அதன் பிறகு நான் செய்வதற்க் ஏதுமில்லை என அமீர் கான் குறிப்பிட்டுள்ளார்.

Related News