கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றி பெற்ற படம் கல்கி 2898 AD. பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் கல்கியைச் சுமக்கும் தாயாக சுமதி என்கிற கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்திருந்தார்.
அவருடைய நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன், கல்கி படத்திலிருந்து தீபிகா விலகி விட்டதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன் பின் சில சர்ச்சைகள் இணையத்தில் எழுந்தன.
தீபிகா படுகோன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றால், வேறு யார் நடிக்கப் போவது என்கிற கேள்வியும் ரசிகர்களால் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், இதற்கான அண்மைய தகவல் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோனுக்கு பதிலாக சுமதி கதாபாத்திரத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க இயக்குநர் நாக் அஸ்வின் திட்டமிட்டுள்ளாராம். அதற்காக சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே ராமாயணா எனும் பிரம்மாண்ட திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, கல்கி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.