Oct 20, 2025
Thisaigal NewsYouTube
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் படப் பிடிப்பு திடீர் நிறுத்தம்
சினிமா

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் படப் பிடிப்பு திடீர் நிறுத்தம்

Share:

நடிகர் விஜய் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் தான் விஜய்க்கு கடைசி படம் எனக் கூறப்படுவதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தை பெங்களூரை சேர்ந்த கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. அண்மையில் இந்த நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறையின் சோதனை காரணமாக கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் ஜனநாயகன் படப்பிடிப்பில் பணியாற்றும் பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

சம்பளம் கொடுக்காமல் கடந்த மூன்று வாரங்களாக படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது அது நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Related News