Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சமந்தாவின் புதிய திட்டம்
சினிமா

சமந்தாவின் புதிய திட்டம்

Share:

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது ஐதரபாத்தில் செட்டில் ஆகிவிட்டவர் சினிமாவை விட்டு விலகப் போவதாகப் பேசியது இணையத்தில் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

வரும் காலத்தில் நான் படத் தயாரிப்பு, என் வியாபாரம் ஆகியவற்றில் முழு கவனம் செலுத்தப் போகிறேன். நடிப்பதை நிறுத்தலாம் என்று யோசிக்கிறேன் என்று அவர் பேசி இருக்கிறார். இது சமந்தாவின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News