Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சீரியலுக்காக அஜித் பட வாய்ப்பை நிராகரித்த நடிகை தேவயானி
சினிமா

சீரியலுக்காக அஜித் பட வாய்ப்பை நிராகரித்த நடிகை தேவயானி

Share:

நடிகை தேவயானி, தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி படங்களில் நடித்தவருக்கு தமிழில் பேர் கொடுத்த படம் என்றால் அது அஜித்துடன் நடித்த காதல் கோட்டை தான்.

அதன் பிறகு தேவயானிக்கு பெரிய மார்க்கெட் இருந்தது. இயக்குனர் ராஜகுமாரனைக் காதலித்து திருமணம் செய்து செட்டில் ஆனார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

தற்போது சன் டிவியில் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற சீரியலை இயக்கி வரும் திருச்செல்வம் நடிகை தேவயானி குறித்து பேசியுள்ளார். அதில் அவர், தேவயானி கோலங்கள் சீரியலுக்காக நிறைய படங்களை நிராகரித்தார்.

அஜித்தின் வரலாறு படத்தில் நடிக்க ரவிக்குமார் கேட்டார். ஆனால் தேவயானி அதில் நடிக்க இணங்கவில்லை. நடிகை தேவயானி படங்களை தாண்டி கோலங்கள் சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது நன்றாகத் தெரிகிறது என்றார். கடைசியாக தேவயானி 3 BHK என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News