Dec 9, 2025
Thisaigal NewsYouTube
SK26 டைம் ட்ராவல் கதையா.. வெங்கட் பிரபு வெளியிட்ட போட்டோ
சினிமா

SK26 டைம் ட்ராவல் கதையா.. வெங்கட் பிரபு வெளியிட்ட போட்டோ

Share:

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் கூட்டணி சேரும் SK26 படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

துப்பாக்கியைப் பிடிங்க சிவா என விஜய் கொடுத்து விட்டுச் சென்ற பிறகு சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு கூட்டணி சேர்ந்து இருக்கும் படம் என்பதும் எதிர்பார்ப்புக்கு காரணம்.

sci-fi கதை என கூறப்பட்ட நிலையில் படத்தின் VFX பணிகளுக்காக தற்போது வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் ஹாலிவுட்டுக்குச் சென்று இருக்கின்றனர்.

இந்நிலையில் ஹாலிவுட்டில் ஸ்டுடியோவில் சிவகார்த்திகேயன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு "The Future is here" என பதிவிட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு.

சிவகார்த்திகேயன் தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என சொல்கிறாரா, அல்லது படத்தின் கதை டைம் ட்ராவல் என்பதை குறிப்பிட அவர் இப்படி சொல்கிறாரா என எல்லோரும் குழம்பி இருக்கிறார்கள்.  

Related News