Jan 16, 2026
Thisaigal NewsYouTube
நடிகரைத் தாண்டி புதிய அவதாரம் எடுக்கும் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்
சினிமா

நடிகரைத் தாண்டி புதிய அவதாரம் எடுக்கும் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்

Share:

பாலிவுட் சினிமா பிரபலங்களுக்கு தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்படி தனது நடனத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகனாக வலம் வரும் ஹ்ரித்திக் ரோஷன் பற்றி தான் இப்போது ஒரு தகவல் வந்துள்ளது. இவர் தனது தந்தை ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு க்ரிஷ் என்ற படத்தில் நடித்தார். படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

சூப்பர் ஹீரோ திரைப்படமாக கிருஷ் அமைய 2, 3 பாகங்கள் வெளியானது, அந்த படங்களும் வெற்றி தான். க்ரிஷ் 3 வெளியாகி 10 வருடங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் க்ருஷ் 4ம் பாகம் எப்போது உருவாகும் என கேள்விகள் எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

தற்போது என்னவென்றால் க்ரிஷ் 4ம் பாகத்தின் மூலம் ஹ்ரித்திக் ரோஷன் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளாராம். விரைவில் இந்த படம் குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

Related News