Jan 14, 2026
Thisaigal NewsYouTube
நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு நல்ல செய்தி
சினிமா

நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு நல்ல செய்தி

Share:

இந்த ஆண்டு பொங்கல் சிறப்பாக நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் வெளியாக இருந்தது. இந்தப் பொங்கலை தளபதி பொங்கலாகக் கொண்டாட ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களும் ஆவலாக இருந்தார்கள். ஆனால் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.

இந்தத் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் தயாரிப்பு குழுவும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஜனநாயகன் பொங்கல் இல்லை என வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு வந்த நல்ல செய்திதான் விஜய்யின் செம ஹிட் படமான தெறி ரீ-ரிலீஸ்.

சரி புது படம் தான் இல்லை, இந்த ஹிட் படத்தைக் கொண்டாடலாம் என ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர். ஆனால் இப்போது என்ன விஷயம் என்றால் தெறி ரீ-ரிலீஸும் தள்ளிப் போயுள்ளதாம். பொங்கலுக்கு புதுப்படங்களின் வரவால் தெறி ரீ-ரிலீஸ் தள்ளிப் போவதாக தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.

குட் நியூஸ் என்னவென்றால் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் ஜனநாயகன் படத்தின் தணிக்கை விவகாரத்தில் மேல்முறையீட்டு வழக்கின் மீது ஜனவரி 15ம் தேதி விசாரணை நடக்க வாய்ப்பு இருப்பதாக நல்ல செய்தி வந்துள்ளது.

Related News