Oct 20, 2025
Thisaigal NewsYouTube
வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்ய உள்ள நிக்கோலாயின் முன்னாள் மனைவி கவிதா யார்? விவாகரத்து காரணம் என்ன?
சினிமா

வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்ய உள்ள நிக்கோலாயின் முன்னாள் மனைவி கவிதா யார்? விவாகரத்து காரணம் என்ன?

Share:

இந்தியா, ஜூலை 02-

பிரபல நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி... திருமணம் செய்து கொள்ள உள்ள நிக்கோலாய் சச்தேவின் முன்னாள் மனைவி கவிதா யார்? இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய காரணம் என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான வரலட்சுமி, தற்போது தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவரால் ஒரு ஹீரோயினாக நிலையான இடத்தை பிடிக்க முடியாவிட்டாலும், விஜய் சேதுபதி பாணியில், வில்லி, குணச்சித்திர வேடம் என எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் அதில் பின்னி பெடல் எடுக்கிறார்.
வரலட்சுமியின் திருமண ஏற்பாடுகள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துவங்கிய நிலையில்... நாளை வரு - நிக்கோலாய் திருமணம் தாய்லாந்தில் தென்னிந்திய முறைப்படி நடக்க உள்ளது.

வரலட்சுமி தன்னுடைய திருமணத்தில் கலந்து கொள்ள, பாரத பிரதமர் மோடி முதல், முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல், நயன்தாரா, அல்லு அர்ஜுன், ரவி தேஜா, சமந்தா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களை தன்னுடைய தந்தை மற்றும் சித்தி ராதிகாவுடன் சென்று அழைத்தார். ஒரு சிலரை சந்தித்து அழைப்பு விடுத்தபோது வரலட்சுமியின் வருங்கால கணவர் நிக்கோலையும் உடன் இருந்தார்.

ஏற்கனவே நிக்கோலாய் குறித்த சந்தேகங்களுக்கும்... இரண்டாவது மனைவியாக மாறுவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கும் தக்க பதிலடி கொடுத்தார் வரலட்சுமி. இதை தொடர்ந்து நிக்கோலாய் சச்தேவின் முன்னாள் மனைவி கவிதா யார் என்பது பற்றியும், இருவரும் பிரிய என்ன காரணம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

நிக்கோலாய் கடந்த 2010 ஆம் ஆண்டு, மிஸ்ஸஸ் கிளாட்ராக்ஸ் வெற்றியாளரான கவிதா என்பவரை தான் திருமணம் செய்துகொண்டார். கவிதா ஒரு மாடல் மற்றும் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற மிஸ் குளோப் போட்டியில் பங்கேற்றார். கவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நிக்கோலாய். இவர்களுக்கு தற்போது 15 வயது நிரம்பிய ஒரு மகள் உள்ளார். அவர் பளு தூக்குதல் சாம்பியன் என்று கூறப்படுகிறது.நிக்கோலாய்க்கும் கவிதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணமாக அமைந்தது. இருவரும் சுமூகமாக பேசி பிரிந்த நிலையில், இவர்களின் மகள் இருவருடனும் மாறி மாறி வசித்து வருகிறார். நிக்கோலாய் வரலட்சுமியை திருமணம் செய்து கொள்வதில் அவரின் மகளுக்கும் மிகவும் சந்தோசம் என கூறப்படுகிறது. திருமண பர்ச்சஸிலும் அவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வரலட்சுமியும் நிக்கோலையை திருமணம் செய்து கொள்ளும் முடிவை அவசர அவசரமாக எடுக்க வில்லையாம். இவர்கள் இருவருமே கடந்த 14 வருட நண்பர்கள். எனவே இவர்கள் இருவருக்குமே அவரவர் வாழ்க்கையில் நடந்த விஷயம் குறித்து நன்கு தெரியும். நிக்கோலாய் நண்பராக மட்டும் இன்றி சிறந்த வாழ்க்கை துணையாகவும் இருப்பார் என்பதால் தான் வரு அவரை தேர்வு செய்துள்ளார்.

வரு - நிக்கோலாய் திருமண கொண்டாட்டம் துவங்கிவிட்ட நிலையில்... இதுகுறித்த போட்டோஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது. ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related News