Oct 20, 2025
Thisaigal NewsYouTube
சிம்பு திடீரென விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிக்கக் காரணம்…
சினிமா

சிம்பு திடீரென விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிக்கக் காரணம்…

Share:

தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. அவர் நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருகிறார். தற்போது, அவர் கைவசம் பல படங்கள் உள்ளன. அதன்படி, பார்க்கிங் பட இயக்குநருடன் சிம்புவின் 49 படம் உருவாகி வருகிறது. அதைத் தொடர்ந்து அவரது 50 - வது படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்கவிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, ஓ மை கடவுளே மற்றும் அண்மையில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த டிராகன் பட இயக்குநருடன் இணைந்து 51 - வது படமான God Of Love படத்தில் நடிக்கவுள்ளார். அதைத் தவிர்த்து சிம்பு ஐபிபோ, காசா கிராண்ட் என தொடர்ந்து பல விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். திடீரென சிம்பு தொடர்ந்து பட அறிவிப்புகளையும், பெரிய விளம்பரங்களிலும் நடிக்க காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, தற்போது தனது 50 ஆவது படத்தை சிம்பு ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளார். அதன் காரணமாகத் தான் தற்போது தொடர்ந்து படங்கள் மற்றும் விளம்பரங்கள் என்று சிம்பு நடித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Related News