Nov 25, 2025
Thisaigal NewsYouTube
AK 64 படத்தின் படப்பிடிப்பு எப்போது?
சினிமா

AK 64 படத்தின் படப்பிடிப்பு எப்போது?

Share:

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இந்த ஆண்டு வெளிவந்த படம் குட் பேட் அக்லி. பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்தது.

இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் AK 64 படத்திற்காக இணைந்துள்ளனர். ஆனால், இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் இயக்குநர் ஆதிக். இதில், "கிட்டதட்ட படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் முடிவுக்கு வந்து விட்டன. பிப்ரவரி மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பம்" எனக் கூறியுள்ளார்.

மேலும், இது தனக்கு ஸ்பெஷல் படம் என்றும், GBU படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித் சார் கொடுத்துள்ள இந்தப் படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும் என்கிற பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News