Oct 18, 2025
Thisaigal NewsYouTube
200 கிலோ நகைகளை அணிந்திருந்தாராம் ஐஸ்வர்யா ராய்
சினிமா

200 கிலோ நகைகளை அணிந்திருந்தாராம் ஐஸ்வர்யா ராய்

Share:

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், பாலிவுட்டில்தான் அவருக்கு பட வாய்ப்புகள் குவித்தன.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், ராவணன், பொன்னியின் செல்வன் என அவ்வப்போது மட்டுமே தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டி வந்தார். ஆனாலும் கூட தமிழில் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய், ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து ஜோதா அக்பர் படத்தில் நடித்தது அனைவரும் அறிந்த விஷயம்தான். அப்படத்தில் முத்துக்களால் ஆன பல கோடி மதிப்புள்ள ஆபரணங்களை அவர் அணிந்து நடித்தாராம்.

அந்த நகைகளின் எடை 200 கிலோ இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் அவை அனைத்துமே அசல் நகைகளாம். அதனைப் பாதுகாக்க படப்பிடிப்புத் தளத்தில் எப்போதுமே ஐஸ்வர்யா ராய்யை சுற்றி பல காவலர்கள் இருந்தார்களாம்.

Related News