தமிழ் சினிமா கொண்டாடும் இளம் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தை இயக்கி கவனத்தைப் பெற்றவர் அடுத்தே கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கி ரசிகர்களின் விருப்பமான இயக்குனராக மாறினார்.
அதன் பின் மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என தொடர்ந்து படங்கள் இயக்கி வந்தவர் LCU எனப்படும் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸை உருவாக்கினார்.
லோகேஷ் இயக்கத்தில் அடுத்து ரசிகர்கள் கைதி 2 படத்திற்காக ஆவலாகக் காத்திருக்கும் வேளையில், அந்த படத்தின் வேலைகளை தொடங்கி விட்டார் என தெரிகிறது.
இந்நிலையில் இப்போது வேறொரு செய்தியும் வந்துள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் அண்மையில் முன்னணி நடிகர் ஒருவரைச் சந்தித்து கதை கூறியுள்ளாராம்.
அவர் வேறுயாரும் இல்லை தெலுங்கு சினிமாவின் புஷ்பா பட வெற்றி நாயகன் அல்லு அர்ஜுன் தான்.
இப்போது அவர் அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாகய்ஹ் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் லோகேஷ் கனகராஜ் கதையை தேர்வு செய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.








