Oct 20, 2025
Thisaigal NewsYouTube
‘கில்லி’ விஜய், திரிஷா நடிக்கவேண்டிய படமே இல்ல
சினிமா

‘கில்லி’ விஜய், திரிஷா நடிக்கவேண்டிய படமே இல்ல

Share:

இந்தியா, ஏப்ரல் 17-

விஜய் திரிஷா நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த கில்லி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர், நடிகை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் காதல் நாயகனாக வலம் வந்த நடிகர் விஜய்யை ஆக்‌ஷன் நாயகனாக உருவாக்கிய படங்களில் கில்லியும் ஒன்று. தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் மிரட்டல் வில்லனாக முத்துப்பாண்டி என்கிற கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக் ஆக கில்லி உருவாகி இருந்தது.

கில்லி படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கும் விஜய்யின் நடிப்பு, திரிஷாவின் கியூட்னஸ், பிரகாஷ் ராஜின் வில்லத்தனம், வித்யாசாகரின் இசை, தரணியின் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை முக்கிய காரணமாக அமைந்தன. இப்படத்திற்காக வித்யாசாகர் இசையமைத்த அனைத்து பாடல்களும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் இதன் ஒரிஜினல் வெர்ஷனாக சொல்லப்படும் ஒக்கடு படத்தை விட கில்லி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் டபுள் மடங்கு வசூலை அள்ளியது.

கில்லி படத்தை எத்தனை முறை டிவியில் ஒளிபரப்பப்பட்டாலும் அதற்கான வருகை என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கில்லி படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவெடுத்த படக்குழு வருகிற ஏப்ரல் 20-ந் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்திற்கான முன்பதிவும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கில்லி படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை 20yearsofghilli என்கிற ஹேஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர், நடிகை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கில்லி படத்தின் கதையை இயக்குனர் தரணி முதன்முதலில் சொன்னது நடிகர் சீயான் விக்ரமுக்கு தானாம். அவருடன் தில், தூள் என வரிசையாக இரண்டு வெற்றிப்படங்களில் பணியாற்றிய தரணி, கில்லி படத்தையும் அவரை வைத்தே எடுக்கும் ஐடியாவில் இருந்திருக்கிறார். அதேபோல் ஜோதிகாவை இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருந்தாராம்.

ஆனால் அந்த சமயத்தில் விக்ரம், ஜோதிகா இருவருமே வேறு படங்களில் பிசியானதால், அந்த கதையை அப்படியே விஜய்யிடம் சொல்லி இருக்கிறார் தரணி. விஜய்யும் அதற்கு ஓகே சொன்னதால் அப்படத்தை அவரை வைத்தே எடுத்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்துள்ளார் தரணி. கில்லி போன்ற மாஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் விக்ரம் நழுவ விட்டுள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related News