Oct 20, 2025
Thisaigal NewsYouTube
கால் வைக்குற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கு, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு வடிவேலு கொடுத்த தரமான பதிலடி
சினிமா

கால் வைக்குற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கு, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு வடிவேலு கொடுத்த தரமான பதிலடி

Share:

, மே 28-

நகைச்சுவை நடிகர் வடிவேலு பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அதற்கெல்லாம் சவுக்கடி கொடுத்திருக்கிறார் வைகைப்புயல்.

தமிழ் சினிமாவில் தன்க்கென ஒரு தனி இடத்தை பிடித்த நகைச்சுவை நடிகர்களுள் வடிவேலுவும் ஒருவர். அவர் சினிமாவில் சில ஆண்டுகள் நடிக்காவிட்டாலும் அவரது புகழ் குறையாமல் நிலைத்து நின்றது. அதற்கு அவர் நடித்த காமெடி காட்சிகள் காலம் கடந்து கொண்டாடப்பட்டது தான் காரணம். இப்படி மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் வடிவேலுவை பற்றி சமீப காலமாக ஏராளமான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அவருடன் நடித்த நடிகர்களே வடிவேலுவை பற்றி கண்ணாபின்னானு விமர்சித்து வந்தனர். அதேபோல் விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு வராததற்கு அவரை கடுமையாக தாக்கி பேசி வந்தனர். இப்படி தன்னைப்பற்றிய விமர்சனங்கள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், அதற்கெல்லாம் சவுக்கடி கொடுக்கும் வகையில் சமீபத்திய பேட்டியில் தக் லைஃப் ரிப்ளை கொடுத்திருக்கிறார். அதைப்பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.

வடிவேலுவை செஃப் வெங்கடேஷ் பட் நேர்காணல் செய்திருந்தார். அதில் வடிவேலு பேசியதாவது : “சினிமாவில் நல்லதைவிட கெட்டது நிறைய இருக்கிறது. அதை தாண்டி வர வேண்டும். இதுபற்றி கமல் சாரிடமே ஒருமுறை கேட்டேன். சார், இதையெல்லாம் எப்படி தாண்டி வந்தீங்க, கால் வைக்குற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்குனு கேட்டேன். இதற்கு கமல், நான் பட்டபாடெல்லாம் அதைவிட பெருசுடா தம்பி, அதையெல்லாம் மனசுல வைக்காதனு சொன்னாரு.

ஒருமுறை போனில் பேசுபோது, வடிவேலு இந்த மாதிரிலாம் நிறைய வருவாங்க, நடிச்சிட்டே இருக்கனும்னு சொன்னாரு. நான் ரீ-எண்ட்ரி வந்ததும் என்னை விமர்சித்த கொல்ல பயல காணோம். தொழிலை உயிராக நேசித்தால் நாம் எங்குமே தோற்க மாட்டோம். எங்கயுமே கீழ விழ மாட்டோம். தற்போது பகத் பாசிலோடு மாரீசன்னு ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அப்படம் அருமையாக வந்துள்ளது. அப்படத்திற்கு பெரிய அவார்டு கிடைக்கும் அப்படி ஒரு கதை அது” என சிலாகித்து பேசி இருக்கிறார் வடிவேலு.

Related News