நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சந்திரமுகி, பில்லா என தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
41 வயதாகும் நயன்தாரா பல கோடியில் சொத்து, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் 350 டி, ஃபோர்டு எண்டெவர், பிஎம்டபிள்யூ 7 சீரி மற்றும் இன்னோவா கிரிஸ்டா உள்ளிட்ட சொகுசுக் கார்கள் வைத்துள்ளார்.
இந்நிலையில், தனது திரைப் பயணத்தில் நயன்தாரா சில படங்களை நிராகரித்துள்ளாராம். தி லெஜண்ட், சென்னை எக்ஸ்பிரஸ், பையா, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, திருச்சிற்றம்பலம் ஆகியவையே அப்படங்களாகும்.








