Nov 4, 2025
Thisaigal NewsYouTube
மணிகண்டன் தவற விட்ட  படம்
சினிமா

மணிகண்டன் தவற விட்ட படம்

Share:

நடிகர் மணிகண்டன் அண்மையில் குடும்பஸ்தன் படத்தில் நடித்ததன் மூலமாக பெரிய அளவில் பேசப்பட்டவர். அவரது மிமிக்ரி திறமைக்கும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

டப்பிங் கலைஞராகப் பணியாற்றி அதன் பிறகு தான் படங்களில் அவர் நடிக்கத் தொடங்கி தற்போது முக்கிய நடிகராக வளர்ந்து இருக்கிறார்.

விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தில் ஏதாவது ஒரு ரோலில் நடிக்கும்படி நடிக்க மணிகண்டனுக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால் அவர் அந்த நேரத்தில் நரை எழுதும் சுயசரிதம் என்ற படத்தை இயக்கி வந்தார்.

"அதனால் தான் அதில் நடிக்க முடியாமல் போனது. அந்த படத்தில் நடித்த எல்லோரும் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இப்படி ஒரு வாய்ப்பைத் தவற விட்டதால் பலரும் திட்டினார்கள்" என மணிகண்டன் கூறி இருக்கிறார். 

Related News