தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது மதராசி மற்றும் பராசக்தி என இரண்டு திரைப்படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
இதில் முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பராசத்தி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளிவந்துள்ளது. அது குறித்து 'தலைவன் தலைவி'' பட இசை வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு தகவல் பகிர்ந்துள்ளார்.
அதில்" சிவகார்த்திகேயனுடனான தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும்" என்று கூறியுள்ளார். இதனால் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிவகார்த்திகேயன் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய கோட் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.