இந்தியா, ஜூலை 6-
நடிகை சமந்தா, கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பயன்படுத்தும் மருத்துவமுறை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்ட நிலையில், இதற்க்கு கடும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து, சமந்தா இதுகுறித்து பரபரப்பு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக அறியப்படுபவர் சமந்தா. விஜய், சூர்யா, தனுஷ் என தொடந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு வரும் இவரின் மார்க்கெட்... திருமணம் ஆகி விவாகரத்தான பின்னரும் குறையவில்லை என்பதே உண்மை
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 வருடத்திலேயே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். திருமண முறிவுக்கு பின்னர் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளான சமந்தா, அதற்காக பல்வேறு ஆன்மீக கோவில்களுக்கும் சென்று வந்தார். இவர் ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும்.. சமீப காலமாக இந்து கடவுள்களை அதிக நம்பிக்கையுடன் வழிபட்டு வருகிறார்
மேலும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக அவதி படும் சமந்தா அதில் இருந்து மீண்டு வருவதற்கு பல சிகிச்சைகள் எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் நடிகை சமந்தா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வாரம் போட்ட பதிவில்... "ஒரு பொதுவான மருந்தை எடுத்துக் கொள்வதற்கு பதில், மாற்று வழியை முயற்சித்து பாருங்கள் என் கூறி, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையை நெபுலைஸர் செய்வது குறித்து சமந்தா பதிவிட்டிருந்தார்.