80-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்தார்.
இதையடுத்து அவருக்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.