Jan 16, 2026
Thisaigal NewsYouTube
தெலுங்கு இயக்குநருடன் கைக்கோர்க்கிறாரா ரஜினி?
சினிமா

தெலுங்கு இயக்குநருடன் கைக்கோர்க்கிறாரா ரஜினி?

Share:

நானி நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் கடந்தாண்டு வெளியானது சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படம். இவரது இயக்கத்தில் இதற்கு முன் அண்டே சுந்தரனிகி என்ற படத்தில் நானி நடித்தார்.

சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவானது. இப்படத்தில் நானியுடன் எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இந்நிலையில் விவேக் ஆத்ரேயா அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்திற்குக் கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தற்பொழுது ஜன நாயகன் படத்தை இயக்கும் எச்.வினோத்தும் ரஜினிற்குக் கதை கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினி ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு எந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரியவில்லை.

Related News