Oct 20, 2025
Thisaigal NewsYouTube
கைதி பாணியில் தயாராகும் தலைவர் 171
சினிமா

கைதி பாணியில் தயாராகும் தலைவர் 171

Share:

இந்தியா, ஏப்ரல் 02 -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் தலைவர் 171 என்ற திரைப்படம் உருவாக இருக்கின்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகவிருக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்தாண்டு வெளியிடப்பட்டது. அதன் பிறகு லோகேஷ் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளில் பிசியாக இறங்கினார்.

லோகேஷின் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனங்களை பெறவில்லை. எனவே தலைவர் 171 படத்தின் கதையில் கூடுதல் கவனம் செலுத்த முடிவெடுத்தார் லோகேஷ் கனகராஜ். அதன் காரணமாகவே தலைவர் 171 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷனுக்காக ஆறு மாத காலம் டைம் எடுத்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் தலைவர் 171 திரைப்படம் தான் இயக்கிய முந்தைய படங்களை போல இருக்காது என்றும், முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இருக்கும் என்றும் லோகேஷ் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் வந்தன. இதுபோன்ற தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் சமீபத்தில் தான் இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. மேலும் இப்படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விக்ரம் மற்றும் லியோ படங்களின் டைட்டிலை மாஸான ஒரு வீடியோவின் மூலம் வெளியிட்டதை போல தலைவர் 171 படத்தின் டைட்டிலையும் லோகேஷ் ஒரு வீடியோவின் மூலம் வெளியிட திட்டமிட்டுள்ளார். அதற்கான படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற இருக்கின்றது.

எனவே இதுதான் படத்தில் சர்ப்ரைஸான விஷயமாக இருக்கும் என்றும், படத்தின் ட்விஸ்ட்டாக இருக்கும் என்றும் ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். இந்நிலையில் இத்தகவல் உண்மையா ? இல்லையா ? என்பது ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கும் டைட்டில் டீசரை பார்த்தல் ஓரளவிற்கு தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News