Oct 20, 2025
Thisaigal NewsYouTube
கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட ‘அரண்மனை 4’ ரிலீஸ் தேதி
சினிமா

கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட ‘அரண்மனை 4’ ரிலீஸ் தேதி

Share:

இந்தியா, ஏப்ரல் 19-

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் அரண்மனை 4 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படங்களில் ஒன்று அரண்மனை. கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு வசூலையும் வாரிக்குவித்ததால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸ் செய்தார் சுந்தர் சி. முதல் பாகத்துக்கு இணையாக அப்படமும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது. இதனால் அதன் மூன்றாம் பாகமும் உருவாகி கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

இந்த மூன்று பாகங்களும் வசூல் ரீதியாக வெற்றியை தழுவியதால், அப்படத்தின் நான்காம் பாகத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் சுந்தர் சி. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இதில் ஹீரோயின்களாக தமன்னா மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ளனர். காமெடியனாக யோகிபாபு நடித்திருக்கும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அரண்மனை 4 படத்தை ஏப்ரல் 26-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அன்றைய தினம் விஷாலின் ரத்னம் படமும் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவித்திருந்ததால், இந்த இரண்டு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி இருந்த நிலையில், தற்போது திடீரென அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளது படக்குழு.

அதன்படி ஏப்ரல் 26-ந் தேதியில் இருந்து அப்படத்தின் ரிலீஸ் மே 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அரண்மனை 4 திரைப்படம் ஒருவாரம் தாமதமாக ரிலீஸ் ஆக உள்ளது. அரண்மனை 4 படம் தள்ளிப்போனதால், நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் சிங்கிளாக போட்டியின்றி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. ரத்னம் படத்தை ஹரி இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படம் சோலோவாக ரிலீஸ் ஆக உள்ளதால் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News