Jan 15, 2026
Thisaigal NewsYouTube
மீண்டும் சினிமாவில் நுழையும் 90ஸ் நடிகை
சினிமா

மீண்டும் சினிமாவில் நுழையும் 90ஸ் நடிகை

Share:

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரோஜா.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 1990களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த போதிலும் ரோஜாவிற்கு அரசியல் மீது பார்வை விழ அதில் முழு கவனம் செலுத்தத் தொடங்கினார். அரசியலில் முழு ஈடுபாடு காட்டியதால் நடிப்பில் இருந்து சுத்தமாக விலகினார்.

இந்நிலையில், தற்போது 12 ஆண்டுகளுக்கு பின் ரோஜா மீண்டும் சினிமாவில் நுழைய உள்ளார்.

அதாவது, லெனின் பாண்டியன் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்குத் திரும்பி உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

இப்படத்தில் கங்கை அமரன், சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், ஸ்ரீதா ராவ் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிடி பாலச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.

Related News