Oct 20, 2025
Thisaigal NewsYouTube
என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இது தான்; ஓப்பனாக ஒப்புக்கொண்ட நடிகை சீதா!
சினிமா

என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இது தான்; ஓப்பனாக ஒப்புக்கொண்ட நடிகை சீதா!

Share:

நடிகை சீதா தன்னுடைய வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்ன என்பதை முதல் முறையாக வெளிப்படையாக கூறியுள்ளார். அப்படி என்ன தவறு செய்தார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.நடிகரும் இயக்குனருமான, பாண்டியராஜன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான, 'ஆண் பாவம்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சீதா. தன்னுடைய முதல் படத்திலேயே கிராமத்து பெண் கதாபாத்திரத்தில், பாவாடை தாவணி அழகில் 80ஸ் ரசிகர்களை கவர்ந்த சீதா... இந்த படத்தில் நடிகர் பாண்டியராஜனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் பாண்டியன், ரேவதி, ஆகியோர் இரண்டாவது நாயகன் - நாயகியாக இப்படத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சீதாவுக்கு, அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.

article_image2

நடிகை சீதா தன்னுடைய வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்ன என்பதை முதல் முறையாக வெளிப்படையாக கூறியுள்ளார். அப்படி என்ன தவறு செய்தார் என்பதை இந்த பதிவில்பார்க்கலாம்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான சீதா... கோலிவுட்டில் நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும், இவள் ஒரு பவுர்ணமி, சங்கர் குரு, தங்கச்சி, துளசி, குரு சிஷ்யன், பெண்மணி அவள் கண்மணி, அவள் மெல்ல சிரித்தாள், அண்ணனுக்கு ஜே, புதியபாதை ஆகிய படங்களில் வெரைட்டியான ரோல்களில் நடித்தார். 80-களில் படு பிஸியான ஹீரோயினாக வலம் வந்த சீதா... ஒரே நேரத்தில் ஓய்வில்லாமல் 3 படங்களில் கூட நடித்துள்ளாராம்

இயக்குனரும் நடிகருமான, பார்த்திபன் இயக்கி - ஹீரோவாக நடித்த 'புதிய பாதை' திரைப்படத்தில் நடிகை சீதா பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பார்த்திபனுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது மட்டும் இன்றி... சீதா- பார்த்திபன் ஜோடியின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே இருவரும் காதலிப்பதாக அந்த காலத்தில் செய்தி தாள்களில் கிசுகிசுக்கள் வெளியான நிலையில், பின்னர் அதனை உறுதி செய்யும் விதமாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க துவங்கினர். ஆனால் சீதாவின் காதலுக்கு அவருடைய பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத நிலையில், உனக்கு இனி நடிப்பே வேண்டாம் ஏன் ஹவுஸ் அரெஸ்ட் செய்யும் அளவுக்கு விவகாரம் போனது.

article_image3

நடிகரும் இயக்குனருமான, பாண்டியராஜன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான, 'ஆண் பாவம்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சீதா. தன்னுடைய முதல் படத்திலேயே கிராமத்து பெண் கதாபாத்திரத்தில், பாவாடை தாவணி அழகில் 80ஸ் ரசிகர்களை கவர்ந்த சீதா... இந்த படத்தில் நடிகர் பாண்டியராஜனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் பாண்டியன், ரேவதி, ஆகியோர் இரண்டாவது நாயகன் - நாயகியாக இப்படத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சீதாவுக்கு, அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான சீதா... கோலிவுட்டில் நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும், இவள் ஒரு பவுர்ணமி, சங்கர் குரு, தங்கச்சி, துளசி, குரு சிஷ்யன், பெண்மணி அவள் கண்மணி, அவள் மெல்ல சிரித்தாள், அண்ணனுக்கு ஜே, புதியபாதை ஆகிய படங்களில் வெரைட்டியான ரோல்களில் நடித்தார். 80-களில் படு பிஸியான ஹீரோயினாக வலம் வந்த சீதா... ஒரே நேரத்தில் ஓய்வில்லாமல் 3 படங்களில் கூட நடித்துள்ளாராம்.

article_image4

இயக்குனரும் நடிகருமான, பார்த்திபன் இயக்கி - ஹீரோவாக நடித்த 'புதிய பாதை' திரைப்படத்தில் நடிகை சீதா பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பார்த்திபனுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது மட்டும் இன்றி... சீதா- பார்த்திபன் ஜோடியின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே இருவரும் காதலிப்பதாக அந்த காலத்தில் செய்தி தாள்களில் கிசுகிசுக்கள் வெளியான நிலையில், பின்னர் அதனை உறுதி செய்யும் விதமாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க துவங்கினர். ஆனால் சீதாவின் காதலுக்கு அவருடைய பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத நிலையில், உனக்கு இனி நடிப்பே வேண்டாம் ஏன் ஹவுஸ் அரெஸ்ட் செய்யும் அளவுக்கு விவகாரம் போனது.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி, பார்த்திபன் மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் காதல் காரணமாக எளிமையான முறையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு தங்களின் திருமண வாழ்க்கையை துவங்கினர். திருமணத்திற்கு பின்னர் ஒப்புக்கொண்ட படங்களை மட்டுமே நடித்து கொடுத்த சீதா... கணவர் பார்த்திபன் கேட்டு கொண்டதால், ஒரேயடியாக சினிமாவை விட்டே விலக முடிவு செய்து... கணவர், குழந்தை, என ஒரு பொறுப்பான குடும்ப தலைவியாக மாறினார். 80 மற்றும் 90-களில் பலரும் பொறாமை படும்படியான நட்சத்திர ஜோடியாக வலம் வந்த சீதா - பார்த்திபனுக்கு அபிநயா மற்றும் கீர்த்தனா என்கிற இரண்டு மகள்களும், ராக்கி என்கிற வளர்ப்பு மகன் ஒருவரும் உள்ளார்.

திருமணம் ஆன 10 வருடத்திலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு இவர்களை விவாகரத்து வரை கொண்டு வந்து நிறுத்தியது. விவாகரத்துக்கு பின்னர் தன்னுடைய மூன்று குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை பார்த்திபன் ஏற்றுக்கொண்டாலும், சீதாவும் தங்களுடைய குழந்தைகளை கவனித்து கொண்டார். சீரியலில் நடிக்கும் போது, நடிகர் சதீஷை சீதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் சீதாவின் சொத்துக்களை அபகரித்துவிட்டு சீதாவை நிர்கதியாக தவிக்கவிட்டு சென்றதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்து சீதா வெளிப்படையாக இதுவரை எதுவும் கூறாத நிலையில், அண்மையில் நடிகர் சதீஷ் கொடுத்த பேட்டி ஒன்றில்... இந்த தகவலில் துளியும் உண்மை இல்லை என பேசி இருந்தார். இருவரும் இணைந்து சீரியலில் நடித்துள்ளதால், இருவருக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. எனவே ஒரு தோழியாக மட்டுமே சீதாவுடன் நான் பேசியுள்ளார். அவர் என்னுடைய வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் கலந்து கொள்வார் ஆனால் எங்களுக்கு திருமணம் ஆனதாக வெளியான தகவல் அத்தனையும் பொய், எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளார். நானும் என் மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம் என பேசி இருந்தார்.

நடிகை சீதாவை பொறுத்தவரை எந்த வதந்தி வெளியானாலும் அதனை காதில் வாங்கி கொள்ளாமல் கடந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். வீட்டில் கார்டனில் வைத்துள்ள சீதா, பெருபாலான நேரத்தில் அதில் தான் செலவிடுகிறார். தன்னுடைய மனதுக்கு பிடித்த கேரக்டர் அமைந்தால் மட்டுமே நடிக்கிறார். சமீபத்தில் கூட, ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'My Perfect Husband ' என்கிற வெப் சீரிஸில் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த வெப் தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகை சீதா, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு குறித்து பேசியுள்ளார். அதாவது, "நம்முடைய அடையாளத்தை நாம் இழந்து போகிற அந்த இடத்தில், நம்முடைய வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும். மறுபடியும் அந்த அடையாளத்தை அடைய நிறைய போராட வேண்டி இருக்கும் என பேசியுள்ளார். இதன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர், கணவருக்காக நடிப்பை கைவிட்டது தான் தன்னுடைய வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு என்று நடிகை சீதா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News