சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றிப்படமாக ஜெயிலர் அமைந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன்லால் என பலரும் நடித்திருந்தனர்.
உலகளவில் ரூ. 620+ கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே 'ஜெயிலர் 2' படத்தில் தெலுங்கு திரையுலகின் ஆக்ஷன் மன்னன் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் ரஜினிகாந்துடன் 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பாலகிருஷ்ணா நிராகரித்து விட்டாராம். காரணம் கூறப்படவில்லை.








