கோவிட் 19 தொடர்பில் நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 28 மரணங்கள் நிகழ்ந்துள்ள வேளையில் புதிய சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் மூன்றாவது ஊக்கத் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமாட் ரட்சி அபு ஹாஸ்ஸான் அறிவித்துள்ளார்.
மக்கள் “Walk – in” முறையில் மூன்றாவது தடுப்பூசியை செலுத்தி க்கொள்வதற்கு அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேரடியாக சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்வது மட்டுமின்றி இலக்கவியல் மற்றும் MySejatera செயலி மூலம் முன்னுறுதி செய்தப் பின்னரும் மக்கள் மூன்றாவது தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று அவர் விளக்கினார்.
சுகாதார அமைச்சின் கிளினிக்குகளில் முன்னுறுதி செய்த பின்னர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் டாக்டர் முஹமாட் ரட்சி சுட்டிக்காட்டினார்.