Jan 15, 2026
Thisaigal NewsYouTube
பாலிவூட் செல்கிறாரா சிவகார்த்திகேயன்?
சினிமா

பாலிவூட் செல்கிறாரா சிவகார்த்திகேயன்?

Share:

அமரன் படத்திற்குப் பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் மதராஸி.

ஏ.ஆர்.முருகதாஸுடன், சிவகார்த்திகேயன் முதன்முறையாக கூட்டணி அமைத்த இந்த படத்தில் வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் அண்மையில் மும்பையில் உள்ள திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார்.

தற்போது இந்த சந்திப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சந்திப்பு குறித்து இருவரும் எதுவும் தெரிவிக்காத நிலையில், பாலிவுட் சினிமா பக்கம் சிவகார்த்திகேயன் வர வாய்ப்பு உள்ளது என்று இணையத்தில் தகவல் வர தொடங்கி உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Related News