2023ம் வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வருடம் வெளியான சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. சிறந்த திரைப்படமாக 12th Fail படம் தேர்வாகி உள்ளது. சிறந்த நடிகராக ஜவான் படத்திற்காக ஷாருக் கான் மற்றும் 12th fail படத்தின் விக்ரம் மாஸேவுக்கும் விருது கிடைத்துள்ளது.
சிறந்த தெலுங்கு படமாக பகவந்த் கேசரி படம் தேர்வாகி இருக்கிறது. இந்த படத்தின் மறு இயக்கம் தான் விஜய் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
சிறந்த தமிழ்ப் படமாக பார்க்கிங் படம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடித்து இருந்த பார்க்கிங் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சிறந்த திரைக்கதைக்காகவும் பார்க்கிங் படத்திற்கு இரண்டாவது விருது கிடைத்து இருக்கிறது. சிறந்த துணை நடிகராக எம்.எஸ் பாஸ்கருக்கு மற்றொரு விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷுக்கு விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வாத்தி படத்திற்காக அவர் விருது வாங்குகிறார்.