Oct 19, 2025
Thisaigal NewsYouTube
10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குநராக எஸ்.ஜே. சூர்யா
சினிமா

10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குநராக எஸ்.ஜே. சூர்யா

Share:

தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் இயக்குநராக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் வில்லனாகக் கலக்கிக் கொண்டு இருப்பவர் எஸ்.ஜே. சூர்யா. ரசிகர்கள் இவரை நடிப்பு அரக்கன் என அழைத்துக் கொண்டாடி வருகிறார்கள். அஜித்தின் வாலி படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார்.

அதன் பிறகு விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார். தொடர்ந்து இயக்குநராக படங்களை இயக்கி வந்த எஸ்.ஜே. சூர்யா ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்கலாம் என முடிவு செய்தார். இறைவி படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். வாலி, குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, கடைசியாக 2015 ஆம் ஆண்டு 'இசை' படத்தை இயக்கி நடித்திருந்தார்.

தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த உள்ளார் எஸ்.ஜே. சூர்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் வெளியாகவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு கில்லர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எஸ்.ஜே. சூர்யா அவரது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

Related News