நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கூலி படம் எப்போதும் என் பயணத்தில் ஒரு சிறப்பான திரைப்படமாக இருக்கும் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கூலி படம் எப்போதும் என் திரைப் பயணத்தில் ஒரு சிறப்பான திரைப்படமாக இருக்கும். இந்தப் படம் இவ்வளவு அழகாக உருவானதற்குக் காரணம் ரசிகர்கள் ரஜினி மீது வைத்த அன்பே.
இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். இந்தப் படம் மற்றும் படம் தவிர்த்து நாம் பகிர்ந்து கொண்ட உரையாடல்களை எப்போதும் மறக்க மாட்டேன். இவை நான் எப்போதும் பொக்கிஷமாகப் போற்றி மறக்க முடியாத தருணங்கள்.
50 வருடங்களாக எங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து, உங்களை நேசிக்கவும், உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும், உங்களுடன் வளரவும் செய்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.