
இந்தியா, ஜூலை 04-
ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் இந்தியன்.
பாடல்கள் தொடங்கி படத்தின் கதை, நடிப்பு, மேக்கப் என அனைத்திலுமே படம் அசத்தியிருக்கும். தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் படு மாஸாக தயாராக வரும் ஜுலை 12ம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

ரிலீஸை நெருங்கிவரும் நிலையில் படத்தின் புக்கிங் எல்லாம் செம மாஸாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் ப்ரீ புக்கிங் விவரங்கள் வெளியாகி வருகின்றன.
தற்போது ஓவர்சீஸில் ப்ரீமியர் மற்றும் முதல் நாள் புக்கிங் கலெக்ஷன் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.
- USA/CAN - $150K
- UK - £11K
- Australia- A$ 55K
- UAE - $6K
- Malaysia- RM 123K
- Rest - $10K
- மொத்தம் - $245K








