Oct 20, 2025
Thisaigal NewsYouTube
ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் எப்போது வெளியீடு?
சினிமா

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் எப்போது வெளியீடு?

Share:

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளதால், சினிமாவிலிருந்து முழுமையாக விலகவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என்றும் அதன் பிறகு முழுமையாக அரசியல் மட்டும் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது. மேலும் அண்மையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி, அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வரும் ஜூன் 22ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

Related News