Oct 18, 2026
Thisaigal NewsYouTube

இது என்ன நாட்டுக்கு முக்கியமான விஷயமா?  வேடிக்கை பார்ப்போம்.. மணிமேகலை பிரச்சனை குறித்து விஜய் டிவி பிரபலம்..!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இது என்ன நாட்டுக்கு முக்கியமான விஷயமா?  வேடிக்கை பார்ப்போம்.. மணிமேகலை பிரச்சனை குறித்து விஜய் டிவி பிரபலம்..!

18 செப்டம்பர்-

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை திடீரென விலகிய நிலையில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மாபாகா, "இது என்ன, நாட்டுக்கு முக்கியமான விஷயமா? நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம்’ என்று கூறியுள்ளார்.

'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை திடீரென விலகினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளர் "தன்னுடைய வேலையில் தலையிட்டதாகவும், தனது தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் பாதிப்பு ஏற்பட்டால், அப்படி ஒரு சூழலில் அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை," என்றும் ஆவேசமாக தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாடகி சுசித்ரா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜய் டிவியின் இன்னொரு பிரபல தொகுப்பாளரான மாகாபா இந்த பிரச்சனை குறித்து கூறிய போது, ’அந்த ஷோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, நான் கருத்து தெரிவிப்பதற்கு ஒன்றுமில்லை. அவங்க ரெண்டு பேரும் தானே அடிச்சுக்கிட்டிருங்கா, நாம் காட்டு வழியாகப் போகும்போது இரண்டு யானைகள் சண்டை போட்டால், நாம் சமாதானம் செய்ய போகக் கூடாது. அந்த ரெண்டும் சேர்ந்து நம்மை நசுக்கிடும். நாம் வேடிக்கை மட்டும் பார்ப்பது தான் நல்லது. இது என்ன, நாட்டுக்கு முக்கியமான பிரச்சனையா?" என்று பதில் அளித்தார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →