பல பாலிவுட் படங்கள் மட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சதிஷ் ஷா (74) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனை அவரது நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான அசோக் பண்டிட் உறுதிப்படுத்தியுள்ளார்.
1951 ஆம் ஆண்டு குஜராத்தி குடும்பத்தில் பிறந்த சதீஷ் ஷா 1970 களில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
1984 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் தொடரான யே ஜோ ஹை ஜிந்தகி மூலம் சதிஷ் ஷா புகழ் பெற்றார். அதில் அவர் 55 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார்.
தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, ஹம் ஆப்கே ஹைன் கோன்..!, ஹீரோ நம்பர் 1, மைன் ஹூன் நா மற்றும் ஃபனா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் சதிஷ் ஷா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.








