Oct 21, 2025
Thisaigal NewsYouTube
சமந்தாவை பிரிந்த அடுத்த ஆண்டே.. நாக சைதன்யா சோபிதாவின் காதல் கதை எப்படி தொடங்கியது தெரியுமா?
சினிமா

சமந்தாவை பிரிந்த அடுத்த ஆண்டே.. நாக சைதன்யா சோபிதாவின் காதல் கதை எப்படி தொடங்கியது தெரியுமா?

Share:

ஆகஸ்ட் 08-

நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் இந்த இருவரின் காதல் கதை எப்படி தொடங்கியது தெரியுமா?

நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்தது. ஹைதராபாத்தில் நாகார்ஜுனா வீட்டில் நடந்த இந்த நிச்சயதாரத்த விழாவில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாகார்ஜுனா நாக சைதன்யா, சோபிதா ஜோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். எனினும் இந்த ஜோடியின் திருமண வாழ்க்கை வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2021-ம் ஆண்டு இந்த ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்து சில மாதங்களுக்கு பிறகு இந்த காதல் கதை தொடங்கியது. கடந்த மே மாதம் 2022-ம் ஆண்டு மே மாதம் நாக சைதன்யாவும் சோபிதாவும் ஹைதராபாத்தில் முதன்முதலில் ஒன்றாகக் காணப்பட்டனர். சோபிதா தனது மேஜர் படத்தை விளம்பரப்படுத்த அங்கு சென்றிருந்தார். அதே மாதம் தனக்கு பிறந்தநாள் வந்ததால் ஹைதராபாத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தார் சோபிதா.

மே 31-ம் தேதி நடந்த சோபிதாவின் பிறந்த நாள் விழாவில் நாக சைதன்யாவும் கலந்து கொண்டார். அப்போதுதான் சோபிதாவும் நாக சைதன்யாவும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு வலுவடைந்தது காதலாக மாறியது, இறுதியில் அவர்கள் டேட்டிங் செய்யத் தொடங்கினர்.

கடந்த 2 ஆண்டுகளாக உறவில் இருந்து வரும் நாக சைதன்யாவும் சோபிதாவும் ஒன்றாக வெகேஷன் கூட சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. ஒருவழியாக தற்போது இருவரும் நிச்சயதார்த்தம் செய்து தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

நாகார்ஜுனா நிச்சயதார்த்த விழாவில் இருந்து ஜோடியின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9:42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சோபிதாவை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.

Related News