Oct 17, 2025
Thisaigal NewsYouTube
ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகிறது?
சினிமா

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகிறது?

Share:

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் அண்மையில் இப்படம் குறித்து பேசும் போது அப்படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறியிருந்தார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் குறித்து அண்மைய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அனிருத் இசையில், தளபதி விஜய்யின் குரலில் பாடல் ஒன்று தயாராகியுள்ளதாம். இப்பாடலை தீபாவளியை முன்னிட்டு வெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தகவல் தெரிவிக்கின்றனர்.

எப்போதுமே விஜய்யின் படத்தில் இருந்து வெளிவரும் முதல் பாடலுக்கு வரவேற்பு மிகப் பெரிய அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News