Nov 27, 2025
Thisaigal NewsYouTube
ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபல நடிகை
சினிமா

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபல நடிகை

Share:

ரஜினிகாந்தின் 173வது திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. ஆனால், திடீரென சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகி விட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

அவர் விலகிய நிலையில், அடுத்ததாக யார் அப்படத்தின் இயக்குநர் என்கிற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்தது.

பார்க்கிங் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் முன்னணி நடிகை சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு அமரன் எனும் மாபெரும் வெற்றிப் படத்தை சாய் பல்லவி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் ஒப்பந்தமாகும் மிகப் பெரிய படமாக இது அமையும் என கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கதிர் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. 

Related News