தமிழ் சினிமாவில் இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்ட்டாக இருந்து இசையமைப்பாளராக மாறியவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு, மீசையை முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார். ஹீரோவாகவும், இசையமைப்பாளராகவும் கலக்கிக்கொண்டிருந்த ஹிப் ஹாப் ஆதி சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து ஒதுங்கி படிப்பில் கவனம் செலுத்தினார்.
பின் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஆதிக்கு PT sir என்ற ஹிட் திரைப்படம் கிடைத்துள்ளது. மேலும் இசையமைப்பாளராக அரண்மனை 4 என்ற ப்ளாக் பஸ்டர் படத்தையும் கொடுத்துள்ளார். இந்நிலையில், அடுத்து ஹிப் ஹாப் ஆதி நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஆதி 'ஜோ' பட இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜோ படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.








