இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தை வைஜெந்தி நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகிய இருவரும் இப்படத்தில் மிக முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
கல்கி திரைப்படத்தில் கல்கியைச் சுமக்கும் தாய் சுமத்தி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக நல்ல வரவேற்பையும் அவர் பெற்றார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்திலிருந்து தீபிகா விலகி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.
அவருக்கு பதிலாக வேறு யார் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்தது. சாய் பல்லவி, ஆலியா பட் போன்ற நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தீபிகாவுக்கு பதிலாக சுமத்தி கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.
பிரியங்கா சோப்ரா தற்போது எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.








