இளையராஜா, இன்றும் கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர்.
இவரது மகள் பவதாரிணியும் ஒரு பாடகி. இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உடல்நலக் குறைவால் இலங்கையில் காலமானார். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது இறப்பிற்கு பிறகு AI மூலம் கோட் திரைப்படத்தில் பவதாரிணியின் குரல் பயன்படுத்தப்பட்டது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதாவது பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா (Bavatha Girls Orchestra) என்ற 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆர்கெஸ்ட்ரா ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக திறமையுள்ள பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
விருப்பமுள்ளவர்கள் தங்களின் விபரங்களை அனுப்பலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது பவதாரிணி நினைவாக இளையராஜா ஒரு சிறப்பு விஷயம் செய்துள்ளார்.
இளையராஜாவிடம் இருந்து இப்படி ஒரு வாய்ப்பு வந்துள்ளதால் கலைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள்.








