Dec 1, 2025
Thisaigal NewsYouTube
நடிகை சமந்தா - ராஜ் நிடிமோரு திருமணம்
சினிமா

நடிகை சமந்தா - ராஜ் நிடிமோரு திருமணம்

Share:

இந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். நான்கு ஆண்டுகள் கழித்து 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுடைய பிரிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

கடந்த சில மாதங்களாகவே நடிகை சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் உலா வந்தன. இதற்கு சமந்தா தரப்பில் இருந்து எந்த ஒரு மறுப்பும் வரவில்லை.

ராஜ் நிடிமுருவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைத் தொடர்ந்து சமந்தா பதிவு செய்து வந்தார். மேலும் பாலிவுட் பத்திரிகைகளில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமோருவும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங்க பைரவி கோவிலில் இன்று திருமணம் நடந்துள்ளது. 


Related News