இந்தித் திணிப்பிற்கு எதிராக நடந்த போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி வெளிவந்துள்ள படம் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தை இயக்க சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இது அவருடைய இசையில் உருவாகும் 100வது படமாகும். கடந்த 10ஆம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இந்த நிலையில், பராசக்தி படத்தில் நடித்திருந்த நடிகர் தேவ் ராம்நாத் தான் படத்தின் creative தயாரிப்பாளர் ஆவார். இவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில், பராசக்தி படத்திற்கு எதிராக வேண்டுமென்றே சிலர் மோசமான விமர்சனங்களைப் பரப்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.








