ஆஸ்ட்ரோ உலகம் விருதுகள் 2023இல் தொலைக்காட்சி, வானொலி, மின்னியல், திரையரங்கு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் உள்ளூர் திறமைகளுக்கும் தயாரிப்புகளுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
இரண்டாவது முறையாக நடத்தப்படும் நட்சத்திரங்கள் நிறைந்த இந்த விருதுகள் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி ஆடிட்டோரியம் மஜ்லிஸ் பண்டாராயா ஷா ஆலாமில் மிக விமரிசையாக நடைப்பெற்றது.
பல பிரிவுகளில் உள்ளூர் கலைஞர்களுக்கு இந்த விருதி நிகழ்ச்சி வாயிலாக அங்கீகாரம் கிடைத்ததோடு வளர்ந்து வரும் திறமைசாளிகளுக்கு ஊக்குவிப்பாகவும் இருந்தது.
டெலி மூவி தொடர் பிரிவில் பிரபலமான முன்னணி ஆண் கதாப்பாத்திரத்திற்கான விருதை, வேங்கையன், மகன், கல்யாணம் 2 காதல் சீசன் 2, திட்டம் போட்டு கடத்துற கூட்டம் ஆகியவற்றில் நடித்த யுவராஜ் கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது.
அதே பிரிவில் பிரபலமான முன்னணி பெண் கதாப்பாத்திரத்திற்கான விருதை, இறைவி திருமகள் காடு , தமிழ்லட்சுமி சீசன் 2 ஆகியவற்றில் நடித்த மூன்நிலாவுக்கு வழங்கப்பட்டது.
ஆண்டின் பிரபலமான டெலிமூவியாக மனமேகேட்கவா,
பிரபலமானத் தொடராக கல்யாணம் 2 காதல் சீசன் 2,
பிரபலமானத் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக சரவெடி நைட்,
பிரபலமான மலேசியத் தமிழ்திரைப்படமாக பூச்சாண்டி ஆகியன தேர்வு செய்யப்பட்டன.
சிறந்த படைப்புகளுக்கான விருதுகள் பிரிவில் டெலிமூவிக்கான சிறந்த ஸ்கிரிப்ட்-ஆக மனமே கேட்கவா-வுக்காக டத்தின் ஸ்ரீ ஷைலா வி-க்கும் யுவராஜ் கிருஷ்ணசாமிக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த டெலிமூவி இயக்குநராக யுவராஜ் கிருஷ்ணசாமியும் சிறந்தத் தொடருக்கான விருதை வென்சோமாவும் ருபீந்திரன் நாயரும் வென்றனர்.
வாழ்நாள் சாதையாளர் விருதை இசைவேள் இசைத் தென்றல் தி.என்மாரியப்பன். கலைமாமணி ஏகவள்ளி, கலைமாமணி கே. எஸ். மணியம் ஆகியோருக்கு வழங்கி சிறப்பு செய்யப்பட்டார்கள்.
