Jan 15, 2026
Thisaigal NewsYouTube
அசின், சிம்பு இணைந்து நடிக்கவிருந்த கைவிடப்பட்ட படம்
சினிமா

அசின், சிம்பு இணைந்து நடிக்கவிருந்த கைவிடப்பட்ட படம்

Share:

நடிகை அசின் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகக் கொடிகட்டி பறந்தவர். கஜினி, சிவகாசி, போக்கிரி, வரலாறு, தசாவதாரம், வேல், காவலன் என தொடர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்தார்.

மேலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். தமிழில் மட்டுமின்றி பாலிவுட் சினிமாவிலும் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கினார். ஆனால், திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

நல்ல நாயகியாக வலம் வந்த அசின், நடிகை சிம்புவுடன் இணைந்து நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம் ஒன்று உள்ளது. அப்படத்தை இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இயக்கவிருந்தார்.

படத்திற்காக போட்டோஷூட் எல்லாம் கூட நடந்தது. அப்படத்திற்கு AC என தலைப்பு வைத்தனர். ஆனால், சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது.

Related News