தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு ‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் பிரேம்குமார். அதன் பிறகு வர்ணம், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, ஒரு பக்கக் கதை என ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் 96 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்தின் மூலம் மக்களின் கவனத்தைப் பெற்றவர் அடுத்து கார்த்தியை வைத்து மெய்யழகன் என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டார்.
மெய்யழகனைத் தொடர்ந்து பிரேம்குமார் அடுத்து விக்ரமின் 64வது படத்தையும் 96 படத்தின் 2ம் பாகத்தையும் இயக்கவிருக்கிறார். இப்படங்களை தொடர்ந்து பிரேம்குமார் அடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது நடிகர் நானியிடம், பிரேம்குமார் கதை கூறியிருப்பதாகவும், தற்போது இவர்களது கூட்டணி குறித்து பேச்சு வார்த்தையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








