Jan 16, 2026
Thisaigal NewsYouTube
சூரியின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்
சினிமா

சூரியின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்

Share:

நகைச்சுவை நடிகராக பிரபலமாகி, இன்று கதாநாயகனாக ஜொலித்து கொண்டு இருப்பவர் சூரி. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் மாமன். உணர்ச்சிப்பூர்வமான கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் விலங்கு என்ற சூப்பர் ஹிட் வெப் சீரிஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாலசரவணன் என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.

இந்நிலையில், சூரி அடுத்து நடிக்கப் போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்து பிரபல இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தினை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்க உள்ளாராம்.

Related News